• vilasalnews@gmail.com

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(டிச.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழக முழுவதும் குறிப்பாக 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று(டிச.16) முதல் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், இன்று(டிச.17) காலை 6 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன‌மழை பெய்து வரும் காரணத்தினாலும், கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிலையங்களுக்கும் நாளை 18.12.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

உயர்கல்வி வகுப்புகளுக்கு  நடைபெறவிருக்கும் தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார்.

  • Share on

நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கவலை இல்லை : மோடி, அமித்ஷா மீது முரளிதரன் குற்றச்சாட்டு!

தூத்துக்குடியை சுத்துபோட்ட கனமழை... வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி!

  • Share on