• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை : 2 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் பண விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி தெர்மல் நகர் லேபர் காலனியைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ஜெகன் ராஜ் (30). கொத்தனாரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த இருளாண்டி மகன் நவநீதன் (30) என்பவரிடம்  ரூ.40 ஆயிரம் பணம் கடனாக கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டதால் இருவருக்கும் முன்விரோதம்  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் லேபர் காலனியில் உள்ள தனியார் ஆயில் மில் அருகே வந்து கொண்டிருந்த ஜெகன் ராஜை, நவநீதன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வன் (29) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர்.  

இது தொடர்பாக தகவல் அறிந்து  தெர்மல்  நகர் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து நவநீதன் மற்றும் செல்வன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Share on

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

மசாலா பாக்கெட்டில் வண்டுகள் - ரூ. 16,010 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

  • Share on