• vilasalnews@gmail.com

சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வானியல் மன்றம் துவக்கம்

  • Share on

தூத்துக்குடி சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வானியல் மன்றம் தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி அஸ்ட்ரோ கிளப் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆஸ்ட்ரோ கிளப் தலைவர் எழிலன் மற்றும் ஓய்வு பெற்ற நல்லாசிரியரும் தலைமை ஆசிரியருமான சம்பத் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு வானில் ஏற்படும் அரிய நிகழ்வுகள் அறிவியல் அறிஞர்கள் பற்றி மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.

மேலும் தொலைநோக்கி மூலமாக வானை உற்று நோக்க வைத்து மாணாக்கர்களை ஆர்வப்படுத்தினர். முன்னதாக தலைமையாசிரியர் எமல்டா அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர் புறம் வட்ட கல்வி அலுவலர் சேசு ராஜன் செல்வக்குமார் வழிகாட்டுதலின்படி சத்திய பாமா, லிசி, ஜான்சி ராணி, கலியலெட்சுமி, எஸ்தர் சாந்தகுமாரி, ஸ்ரீதேவி, தெய்வ கனி, மேரி பியூலா, அமலி,முத்துமாரி, செல்வராணி மற்றும் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் ஜெபா எபனேசர் நன்றி கூறினார்.

  • Share on

100% தேர்ச்சி பெறச் செய்த தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்குபாராட்டு விழா!

விளாத்திகுளம் அருகே பட்டப்பகலில் ரூ.35 லட்சம் ஊர்ப்பணம் திருட்டு : புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என போலீசார் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!

  • Share on