தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் 100% தேர்ச்சி பெறச் செய்த தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 மார்ச்/ஏப்ரல்-ல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தங்களது பாடத்தில் 100% தேர்ச்சி பெறச் செய்த அரசு மற்றும் அரசு மான்ய உதவி பெறும் தனியார் பள்ளிகளை சார்ந்த முதுகலை கலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி கல்வி மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் குருநாதன், கோவில்பட்டி கல்வி மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன், மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை சாந்தினி கௌசல் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 1060 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவம் செய்தும் அனைவரையும் பாராட்டினார்கள். முடிவில் வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.