• vilasalnews@gmail.com

பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் சரத்குமார் போட்டி? விமான நிலையத்தில் சரத்குமார் பேட்டி!

  • Share on

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுகூட்டம் நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமாருக்கு அக்கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் கூறியதாவது :-

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்தும் சென்னை போன்ற மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்யமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.

சென்னையை பொறுத்தவரை குறை கூற கூடாது என்றாலும் நிறைவாக இல்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தான் உள்ளோம். நாம் போய் யாருக்காவது உதவி செய்ய போகலாம் என்று நினைத்தாலும் கூட நாமே வெளியே செல்லமுடியாத நிலையில் தான் சென்னை வெள்ள பாதிப்பு உள்ளது.

சென்னை மக்கள் தற்போது தவிப்பிலும் வேதனையிலும் உள்ளனர். பொதுமக்கள் இப்ப காட்டக்கூடிய எதிர்ப்புகளை தேர்தல் நேரத்தில் காட்டாமல் மறந்து விடுகின்றனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் காட்டினால்லதான் ஆட்சிகள் மாறும். காட்சிகள் மாறும்.

தென்பகுதிகளில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணம் இங்கே தொழில் வளங்களை உருவாக்காதது தான். ஆகவே, தென்மாநிலங்களில் தொழில் வளங்களை உருவாக்க வேண்டும். தூத்துக்குடி, நெல்லை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் எண்ணம் இல்லை. நீங்கள் விருப்பப்பட்டால் யோசிக்கலாம். கூட்டணி என்றாலே அரசியல் கட்சிகள் வீக் ஆகிவிடுகின்றன. கூட்டணி விரும்பவில்லை.

  • Share on

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் வழங்கல்

100% தேர்ச்சி பெறச் செய்த தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்குபாராட்டு விழா!

  • Share on