சமத்துவ மக்கள் கழகம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் கட்சி நிர்வாகிகளுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய காலண்டர்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசும்பொன் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் கரும்பு கணேசன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாநகர அவைத்தலைவர் மதியழகன், மாநகரத் துணைச் செயலாளர் சந்திரசேகர், சண்முககுமார், வினோத், முத்துச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.