தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளீதரன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிலா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், ரஞ்சிதம் ஜெபராஜ் ,சின்னகாளை, மைக்கேல் பிரபாகர், மாவட்ட பொதுச்செயலாளர் மிக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமார முருகேசன் வார்டு தலைவர்கள் காலிங்கம், தனுஷ், சுப்பிரமணி, ராஜரத்தினம், ரெனீஸ் பாபு ,மகாராஜன், கணேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.