புதூர் ஊராட்சி ஒன்றியம், மாசர்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் மாசர்பட்டி ஊராட்சி சார்பாக வளர்க்கப்படும் மூலிகை தோட்டம், மண்புழு உரம் உள்ளிட்டவற்றையும் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, மரங்கள் மக்கள் இயக்கம் ராகவன், மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, மாவட்ட பிரதிநிதி சோலைசாமி, ஒன்றிய பிரதிநிதி அழகர்சாமி, ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேச பாண்டியன், கிளைச் செயலாளர்கள் செல்லதாய், அதிவீரபாண்டியன், ஒன்றிய பிரதிநிதி அழகர்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் பாலையா, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.