• vilasalnews@gmail.com

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

  • Share on

மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளியின் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வலியுறுத்தி தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் பெர்சில் தலைமையில் மாவட்டச் செயலாளர் அழகு லட்சுமி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட குழுவினருடன் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியர் லெனின் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்களின் கோரிக்கை மனுக்கள் முறையாக ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியதையடுத்து நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது.

  • Share on

வாங்கிய ஒரு மாதத்திலேயே இரு சக்கர வாகனம் பழுது - புதிய இஞ்சின் மற்றும் 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மாசர்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் திட்டம் - இடங்களை ஆய்வு செய்தார் மார்கண்டேயன் எம்எல்ஏ!

  • Share on