• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் 2873 குடும்பங்கள் பயன் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  • Share on

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்  ஏற்பாட்டில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம், மில்லாபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 02.12.2023 மற்றும் 03.12.2023 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. 


மேற்படி முகாமில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பணியாளர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு முகாமிலேயே வருமான சான்று உடனே வழங்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைக்கான இணையதளம் வழியாக புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு நாட்கள் முகாமில் 573 நபர்களுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது. ஏற்கனவே கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை வைத்திருக்கும் 630 பேர்களுக்கு இம்முகாமில் சரி பார்க்கப்பட்டு இணைய தளம் வழியாக அவர்களுக்குரிய எண்களை குறித்து கொடுத்து ”இ” சேவை மையத்தில் அவரவர் எண்ணை குறிப்பிட்டு காப்பீட்டு அட்டை பெற்றிட தெரிவிக்கப்பட்டது.


மேலும், இம்முகாமில் பொதுமக்கள் அதிக பேர் கலந்து கொண்டுள்ளதால் அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் இம்முகாமில் வருமானச் சான்று கொடுத்து 06.12.2023 முதல் 07.02.2024 வரை தினசரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவரவர்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் சென்று புகைப்படம் எடுத்திட 1670 நபர்களுக்கு உரிய அலுவலர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம் மூலம் 2873 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், இம்முகாமில் கலந்து கொண்டுள்ள அனைத்து பொது மக்களுக்கும் அனைத்து வகை வசதிகள், தேநீர் மற்றும் மதிய உணவு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனால் ஏற்பாடு செய்யப்பட்டது.

  • Share on

இனி சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விட்டால் இதுதான் கதி.... எச்சரிக்கை கொடுத்த தூத்துக்குடி ஆட்சியர்!

ஆளும் கட்சி கவுன்சிலர்கள் ஒருவர் கூட இல்லாத புதூர் யூனியன் - அதிரடி காட்டிய அதிமுக

  • Share on