• vilasalnews@gmail.com

ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 104 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

  • Share on

மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 104 வது பிறந்த நாள் விழா இன்று 17-ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவரும் , கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான இரா.காந்தி ( எ ) காமாட்சி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு, அலங்கரித்து வைக்கப்படிருந்த எம்ஜிஆர் திருஉருவப்படத்திற்கு, மாலை அணிவித்தும்,  மலர்தூவியும் மரியாதை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு படகு வசதி - மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!

பயிர் சேதம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

  • Share on