ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் நேற்று (04.12.2023) ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.