தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் மாநில மாநாடு நாளை( டிச 4 ) நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்காக தூத்துக்குடியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க 22 வது மாநில பொது குழு மாநாடு நாளை ( டிச.,4 ) தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து சங்க மாநில தலைவர் வீரமுத்து, பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் நேற்று ( 2.12.23 ) தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, மாநாடு தொடர்பான விஷயங்கள் குறித்து பேசினர். மேலும், மாநாடு நடைபெறும் திருச்செந்தூர் சாலை மற்றும் மண்டபம் அருகில் மாநாட்டிற்காக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பாக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.