• vilasalnews@gmail.com

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு படகு வசதி - மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!

  • Share on

தூத்துக்குடி முத்தம்மாள் காலணி, ராம்நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து வீட்டை விட்டு வெளியேறமுடியமல் தவித்த அப்பகுதி மக்களுக்கு கடை வீதி மற்றும் இதர அலுவல்களுக்கு வெளியே சென்று வர படகு வசதி மற்றும் வாகன வசதி செய்து கொடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முத்தம்மாள் காலணி, ராம்நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்து அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு வெளியே முடியாமல் பேராபத்தில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து, தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் ஆல்டிரின் ஆகியோர்கள் உதவியுடன் அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு படகு வசதி செய்து கொடுத்து, அவர்கள் படகில் செல்வதையும் பார்வையிட்டார்.

மேலும், அவர்களுக்கு உதவ தூத்துக்குடி காவல்துறையின் பேரிடர் மீட்பு படையினர் 10 வீரர்களையும் அப்பகுதி மக்களுக்கு வெள்ளம் குறையும் வரை அங்கேயே இருந்து உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அப்பகுதி மக்கள் தங்களுக்கு வாகன வசதி வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் காவல்துறை வாகனம் ஒன்றையும் அங்கே நிறுத்தி அவர்களுக்கு உதவ காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை,  வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், காவல் ஆய்வாளர் அருள்ராஜ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

  • Share on

ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 104 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

  • Share on