• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் - மேயர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சில இங்களில் அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருவதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப குடிநீர் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை கால மாதங்களில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக கூடுதலான தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாநகரின் மக்களுக்கு சீரான குடிநீர் தேவையை வழங்க தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி ஒரு புறம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும்,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சில இங்களில் அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருவதாக புகார் எழுந்துள்ளது. இதில் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், மேயர் ஜெகன் பெரியசாமியின் நிகழ்ச்சிகளில் அந்த ஆளும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு, தங்களை மேயருக்கு நெருக்கமான ஆளாக காட்டிக்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை ஏமாற்றி, குடிநீர் திருட்டில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.

வடிகால், சாலைப் பணி, ஆக்கிரமிப்பு இடங்கள் உள்ளிட விஷயங்களை கவனத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டு செயலாற்றி வரும் தூத்துக்குடி மேயர், இது போன்ற தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் திருடப்பட்டு விற்பனை சம்பவங்கள் குறித்து உரிய விசாரனை மேற்கொண்டு, ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு குடிநீர் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

  • Share on

குளத்தூரில் புகையிலைப் பொருட்களை விற்க முயன்றவர் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்!

தூத்துக்குடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாநாடு டிஜிட்டல் பேனர்கள் கிழிப்பு!

  • Share on