• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டம் - நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி தேவர் புரம் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து, வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் வரவேற்புரை ஆற்றினார்.

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனைமர விதைகளை, பனைமர தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் நட்டு, உலகசாதனை பட்டியலில் இடம் பெற்ற சமத்துவ மக்கள் கழக தலைவர், பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு பாராட்டுக்கள்.

தொடர்மழை காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றி போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு  நடவடிக்கை எடுத்த அமைச்சர் கீதாஜீவன்,  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் மேல்பகுதி தரைதளத்தை முழுமையாக அகற்றி புதிதாக தரமான கான்கிரீட்தளம் போட்டு  பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறையை   வலியுறுத்துதல். அதுவரை வாகைகுளம் டோல் கேட்டில் வாகனங்களுக்கு கட்டண வசூல் நிறுத்த வேண்டுதல்.

உப்பளங்களுக்கு வழங்கப்படும் மின்சாரமானது தொழிற்சாலைகளுக்குரிய மின்கட்டண விகிதம் வசூலிக்கப்படுகிறது. உப்புத்தொழிலை பாதுகாத்து மேம்படுத்த உப்பளத்திற்கு விவசாய தொழிலாளக்கருதி விவசாயத்திற்குறிய மின் கட்டணமாக மாற்றி வழங்க வேண்டும் என தமிழக அரசையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தையும் கேட்டுக்கொள்ளுதல்

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அமோகமான வெற்றிக்கு பாடுபடுதல்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை தேடும் பெண்களா நீங்கள்? உங்களுக்குதான் இந்த வாய்ப்பு... மிஸ் பன்னிறாதீங்க!

தூத்துக்குடி மாநகரில் இன்று ( நவ.,30 ) மின்தடை!

  • Share on