தூத்துக்குடி மாவட்டத்தில் ஓன் ஸ்டாப் சென்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுபாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக கோவில்பட்டியில் ஒன் ஸ்டாப் சென்டர் ஒருங்கிணைந்த சேவை மையம் (Additional One Stop Centre) செயல்படவுள்ளது.
அதில் சுழற்சி முறையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி : ஒரு மையநிர்வாகி - சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் (MSW),
ஒரு மூத்த ஆலோசகர் - சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் (MSW) அல்லது உளவியல், சமூகவியலில் முதுநிலைப் பட்டம்.
ஆறு வழக்குப் பணியாளர்கள் - சமூகப்பணி அல்லது உளவியல் அல்லது சமூகவியலில் இளநிலைப் பட்டம்
ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் - கணினி அறிவியலில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம்.
இரண்டு பாதுகாவலர்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி
இரண்டு பல்நோக்கு உதவியாளர்கள் - 8ம் வகுப்பு தேர்ச்சி
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 15.12.2023 மாலை 5 மணிக்குள் கீழ்காணும் மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரபள்ளம், தூத்துக்குடி - 628101, தொலைபேசி எண்: 04612325606 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.