• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய போட்டி - மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகளை வழங்கினார்

  • Share on

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, தேசிய பசுமைப்படை இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தூத்துக்குடி மாநகராட்சி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தூத்துக்குடி தேசிய பசுமைப்படை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அளவிலான காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டிகள், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து 20.11.2023 திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டியை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார்கள். 


தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 பள்ளிகளில் இருந்து சுமார் 400 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். காற்று மாசுபாடு குறைத்தல் மற்றும் தூய்மையான எரிபொருள் மற்றும் அதன் நன்மைகள் என்ற தலைப்பில் இரண்டு பிரிவுகளாக தலா 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு நடுவராக அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஏழு ஓவிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மிகச்சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்தனர். போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களில் 180 மாணவர்களின் ஓவியங்கள் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 28.11.2023 செவ்வாய்க்கிழமை இன்று காலை  தூத்துக்குடி ஏபிசிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு தலைமையுரையாற்றி, பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வெற்றி சான்றிதழ்களை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி வரவேற்புரையாற்றினார். 


முதல் பரிசு பெற்ற 60 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.500 தொகையும்  பாராட்டுச் சான்றிதழும், இரண்டாம் பரிசு பெற்ற 60 மாணவ மாணவியர்களுக்கு பரிசு தொகையாக ரூ.400, பாராட்டுச் சான்றிதழும், மூன்றாம் பரிசு பெற்ற 60 மாணவ ரூ.300, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. முடிவில், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி  நன்றியுரையாற்றினார். 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹசன் பானு மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் பீர் பாட்டினால் தாக்கி கொலையை மிரட்டல் விடுத்தவர் கைது!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமான நிறுவனம் ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

  • Share on