தூத்துக்குடியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் புதிய முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்சாமிக்கன் மகன் பொன்துரைராஜ் (31) என்பவர் கடந்த 23.11.2023 அன்று மாலை பூபாண்டியாபுரம் கல்லறை தோட்டம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு மதுஅருந்திக் கொண்டிருந்த தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த சப்பானிமுத்து மகன் அஜித்குமார் (24) மற்றும் இவரது நண்பர்களுக்கும், பொன்துரைராஜ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பொன்துரைராஜிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டினால் தாக்கி கொலையை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொன்துரைராஜ் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி வழக்குபதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.