தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் உதவி ஆய்வாளர் முத்து வீரப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சக்திவேல், ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய போலீசார் நேற்று (26.11.2023) புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டம்புளி பகுதியில் உள்ள சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் உதயகுமார் (62) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் உதயகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 5,150 மதிப்புள்ள 44 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட உதயகுமார் மீது ஏற்கனவே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.