• vilasalnews@gmail.com

அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் குறித்து அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது வழக்குப்பதிவு!

  • Share on

அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது தாளமுத்து நகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனின் நற்பெயரையும், நன்மதிப்பையும் கெடுக்கும் விதமாக, அவரிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றி வரும் என்மீது, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு சில வாட்ஸ்அப் குழுக்களில் பொய்யான செய்திகளை பரப்பி வரும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், தற்போது பரவலாகும் அந்த வாட்ஸ்அப் செய்திகளை உடனே தடுத்து நிறுத்தக்கோரியும், தூத்துக்குடி இராஜபாளையத்தை சேர்ந்த அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளரும், வயணபெருமாளின் என்பவரது மகனுமான மணி என்பவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில், தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் மீது ஐபிசி 153, 505 ( 1 ) ( P ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது

வழக்குகள் எண்ணிக்கை உயர்ந்தாலும்; தொடரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை!

  • Share on