தூத்துக்குடி டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய திருவிழா நவ.,24ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். முதல் நாள் திருவிழா கொடியேற்றமும் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு தலைமை மறையுரையாற்றினாா். கீழவைப்பாா் பங்கு தந்தை அருட்தந்தை அந்தோணி ஜெகதீசன், தருவைக்குளம் பங்கு தந்தை வின்சென்ட், வெள்ளப்பட்டி பங்குதந்தை வினித்ராஜா ஜஸ்டின் மற்றும் மன்னின்மைந்தா்கள் அருட்தந்தையா்கள் கலந்து கொண்டனா்.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்வான டிசம்பா் 1 வெள்ளிக்கிழமை 8 ஆம் திருவிழா மாலை நற்கருனை பவணி நடைபெறும். அருட்தந்தை ஜோ தலைமையில் மறையுரை நடைபெறும். 9ஆம் திருவிழா (டிச.2) மாலை வள்ளியூா் விஎம்எஸ்எஸ்எஸ் இயக்குனா் அருட்தந்தை ரெக்ஸ் அடிகளாா் தலைமையில் மறையுரை நடைபெறும்.
10ஆம் திருவிழா டிசம்பா் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துரைகுடியிருப்பு பங்குதந்தை அருட்தந்தை ஆலிபன் அடிகளாா், தென் மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளா் அருட்தந்தை ஜோசப் ஸடாலின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். திருவிழா காலங்களில் காலை திருப்பலியும் மாலை நட்கருணை ஆசீா் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை குழந்தைராஜன் மற்றும் அருட்சகோதாிகள் ஊா்நிா்வாகிகள் பங்கு இறைமக்கள் செய்திருந்தனா்.