• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கல் மண்டபம் அமைக்க கல்தூண் நிர்மாணம் - அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

  • Share on

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கல் மண்டபம் அமைப்பதற்கு பிரம்மாண்ட கல் தூண்கள் நிர்மாணம் செய்யும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் உபயதாரர்கள் நிதியுதவியுடன் நடந்து வருகிறது. இதில் 63 தூண்களுடன் கூடிய கல் மண்டபம், சீதேவி, பூதேவி ஆண்டாள், ஆஞ்சநேயர் சன்னதிகள் புதுப்பிக்கப்படுகிறது. இதில் பிரதான பணியான கல் மண்டபம் அமைப்பதற்கு 63 பிரம்மாண்ட கல் தூண்கள் நிர்மாணம் செய்யும் பணியை அமைச்சர் கீதா ஜீவன்  துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் இளங்குமரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயபால், பாலசங்கர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மேலாளர் சங்கர்,  கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!

தூத்துக்குடி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது

  • Share on