• vilasalnews@gmail.com

ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்விளக்கு அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் மதிமுக கோரிக்கை மனு!

  • Share on

ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்கம்பம் நட்டு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும், வழக்கறிஞருமான புதுக்கோட்டை செல்வம் ஆலோசனையின் பெயரில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப் பெருமாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் சுமார் 700 வீடுகள் உள்ளது. பொதுமக்கள் விவசாயிகள், பள்ளிகுழந்தைகள் தங்கள் அன்றாட தேவைக்கு பொருட்கள் மற்றும் விவசாயம் சம்மத்தமான தேவைகள் அனைத்தையும் வாங்குவதற்கு ஸ்ரீமூலக்கரை முதல் ஸ்ரீவைகுண்டம் வரை செல்லக்கூடிய கரை ரோட்டைதான் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கரை ரோடு இரவு நேரங்களில் செல்வதற்கு மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது.

மேலும் அவ்வழியில் விச பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் ஊர் பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீமூலக்கரை முதல் ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோட்டிற்கு புதிய மின் கம்பம் அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு ஸ்ரீமூலக்கரை கிராம மக்கள் சார்பாக தாங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

திருவண்ணாமலை மகா தீபம் கொப்பரையின் முழு விபரம் இதோ!

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!

  • Share on