• vilasalnews@gmail.com

திருவண்ணாமலை மகா தீபம் கொப்பரையின் முழு விபரம் இதோ!

  • Share on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வரும் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக ஆறு அடி உயர ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொப்பரை தீபம் மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்ப்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில் கால் இன்ச் தடிமனுடன் 20 வளைய ராடுடன் கூடிய செப்புத்தகடில் செய்யப்பட்டு,  வண்ணம் பூசப்பட்டு,  சிவ சிவ என வாசகம் எழுதப்பட்டு, மலை உச்சியில் எரியும் மகா தீபத்தின் மீது, அர்த்த நாதீஸ்வரர் எழுந்தருளி காட்சி அளிப்பது போன்று படம் வரைந்து கொப்பரை தயார் நிலையில் உள்ளது.

இவை வரும் 25ஆம் தேதி மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் 26 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும்

  • Share on

தூத்துக்குடியில் உலக மீனவர் தின விழா : தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு

ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்விளக்கு அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் மதிமுக கோரிக்கை மனு!

  • Share on