• vilasalnews@gmail.com

அழுகிய முட்டை புகார் - அமைச்சர் கீதாஜீவன் விளக்கத்தால் டிரெண்ட் ஆகும் முட்டை விவகாரம்!

  • Share on

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். மழையால் முட்டை மீது வைக்கப்பட்டிருந்த கறுப்பு மை ஊறி முட்டைக்குள் இறங்கி விட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளிக்கவே இந்த விளக்கமானது, தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவருகிறது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக மாணவ மாணவியருக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். சத்துணவில் வாரத்தில் 3 நாட்கள் முட்டை விநியோகம் செய்யப்படுகிறது.

பழைய முட்டைகளை பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மூன்று நாட்களும் முட்டையில் தனித்தனி கலர் அடையாளம் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் முட்டையில் கருப்பு கலர் இருந்தது. குறிப்பிட்ட நாளில் அங்கு பலத்தமழை பெய்ததால் முட்டைகள் நனைந்து, கருப்பு மை ஊறி முட்டைக்கு உள்ளே கருப்பு கலர் இறங்கியுள்ளது. இது உணவு பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது என்று கூறினார்.

சிலர் அரசு மீது எப்போது குறை கண்டுபிடிக்கலாம்? என்ற நோக்கத்தில் இதை பூதாகரமாக்க முயன்றனர். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. மாணவர்களுக்கு நல்ல தரமான முட்டைகள்தான் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார் அமைச்சர் கீதா ஜீவன்.

இந்த நிலையில் தான், மழையால் முட்டை மீது வைக்கப்பட்டிருந்த கறுப்பு மை ஊறி முட்டைக்குள் இறங்கி விட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் அளித்த விளக்கமானது, தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவருகிறது.

வலிக்க வலிக்க முட்டை போடும் கோழிக்கு தெரியாது, தன் மீது பழி  போட்டு இப்படி பணம் சம்பாதிக்க முடியும் என. 

உருட்டா இருந்தாலும் அதில ஒரு நியாயம் வேண்டாமா? 

அனில் பாலாஜி, தெர்மால்கோல் ராஜீயையே மிஞ்சிருவாங்க போல முட்டை அமைச்சர்.

அமைச்சரின் முட்டை கதையை கேட்கும் போது கேப்டன் விஜயகாந்த் நடித்த தமிழ்செல்வன் படத்தில் வரக்கூடிய முட்டை டெண்டர் சீன் தான் நியாபத்திற்கு வருது.

இவ்வாறு சமூக வலைதளங்களில் கமெண்டுகளும், மீம்ஸ்களும் உலாவந்து கொண்டு இருக்கின்றன.

அழுகிய முட்டை விவகாரத்தில் ஒரு குற்றம் நடத்துள்ளது. அதன் மீது நீங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தோ, எடுத்த நடவடிக்கை குறித்தோ தரக்கூடிய விளக்கத்தை தாண்டி, அந்த குற்றத்தை மூடி மறைக்க அமைச்சர் கீதாஜீவன் முயன்று அதற்கு ஒரு விஞ்ஞான ரீதியான விளக்கத்தை அமைச்சர் கீதாஜீவன் கொடுத்திருப்பத்தை தான் ஏற்று கொள்ள முடியாமல் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருவதாக சொல்லப்படுகிறது. 

ஆளும் கட்சியின் தவறுகளை கையில் எடுத்து அரசியல் செய்ய வேண்டிய எதிர்கட்சியான அதிமுகவானது தலைமையிலும் சரி, உள்ளூர் தூத்துக்குடி அதிமுகவினரும் சரி மௌனம் காத்து வரும் நிலையில், முட்டை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதை தொடர்ந்து, நடுநிலையான  மக்களின் கவனத்தை பாஜக ஈர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.

  • Share on

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் ( ? ) குவிமாடத்துடன் கூடிய திருஉருவச்சிலை திறப்பு விழாவும் சர்ச்சைகளும்!

தூத்துக்குடியில் தங்க நகைகளை அடகுவைத்து அதிக லாபம் பெற்று தருவதாக கூறி 400 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த பெண் உட்பட 2 பேர் கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

  • Share on