தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி காவல்துறை - பொதுமக்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி காவல்துறையினரும், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இணைந்து இன்று (16.01.2021) சமத்துவ பொங்கல் விழா முத்தையாபுரம் காவல் நிலைய வளாகத்தில் கொண்டாடினார்.
தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையேற்று பொங்கல் பானையில் அரிசியிட்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்து, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இப்பொங்கல் விழாவில், சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் வீரபாண்டியன் நகர் பங்குத்தந்தை மரிய ஜான், முத்தையாபுரம் ஜமாத் செயலாளர் காஜா பாய், ஸ்பிக்நகர் அர்ச்சகர் ஹரிகரன், ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் ரத்னதுரை, ஜேஎஸ் நகர் மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் முத்துகிருஷணன், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் மாதவன், தங்கம்மாள்புரம் ஊர்த்தலைவர் சிவலிங்கம், பொட்டல்காடு ஊர்த்தலைவர் செல்வசேகர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டியன், உதவி ஆய்வாளர்கள் சதீஷ் மற்றும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையின் உடனிருந்தனர்.