தூத்துக்குடி நகர தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 154 வது பிறந்த நாள் விழா இன்று (நவ.15) கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து, தூத்துக்குடியில் உள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், அவைத் தலைவர் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், எம்எல்எப் தொழிற்சங்கம் அனல் செல்வராஜ், மாநகர பொருளாளர் செல்லப்பா, மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப்பெருமாள், வெங்கட்ராமன், பெருமாள் மற்றும் மதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.