• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சமக தலைவர் படம் கிழிப்பு : சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

  • Share on

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சமக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணம் படம் இடம்பெற்றிருந்த பேனரை கிழித்த சமூகவிரோதிகள் மீது நடிக்க வலியுறுத்தி நவ.,17ம் தேதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை விளம்பரப்படுத்தி விழிப்புணர்வுக்காக,  தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில்  தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின்  மற்றும் சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன்  உருவப்படங்களை 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக விரோதிகள் சிலர் கிழித்து அவமரியாதை செய்திருக்கிறார்கள்.

மேற்படி நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மற்றும் கட்சியினர் சார்பில்  புகார் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் சமூகவிரோதிகளின்  இச்செயலை கண்டித்தும், காவல்துறை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்ற 17.11.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தூத்துக்குடி சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

திருச்செந்தூரில் தரிசன கட்டணம் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி!

குரூஸ் பர்னாந்து சிலைக்கு மதிமுக மரியாதை

  • Share on