அதிமுக ஐடி விங் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக நிர்வாகிகளை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
திமுக ஐடி விங் 2.0 போலவே, அதிமுக ஐடி விங்கும் அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாக வசதிக்காக, 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றிற்கு தலைவர், செயலாளர் என நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி என 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அதிமுக ஐடி விங். ஒவ்வொரு மண்டலத்திலும் 4 மாவட்டங்கள் வரை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சென்னை, விருதுநகர், திருநெல்வேலி மண்டலங்களுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளையும் நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அந்த வகையில், திருநெல்வேலி மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக நெல்லை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக வழக்கறிஞரும், தூத்துக்குடி மாமன்ற எதிர்கட்சி கொறடாவுமான, கவுன்சிலர் மந்திரமூர்த்தியையும், துணை செயலாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த வைப்பார் ராமகிருஷ்ணகார்த்திக் ராம் ஆகியோரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.