தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு கூட்டம் நாளை நவ.,4 ம் தேதி ( சனிக்கிழமை ) நடைபெறுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது :
நாளைய தினம் 04.11.2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்செந்தூர் ரோட்டில் உள்ள மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வரவேற்புரையாற்றுகிறார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் முன்னிலை வகிக்கின்றார்.
சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜய தரணி, எஸ்சி எஸ்டி துறை மாநில தலைவர் ரஞ்சன் குமார், ஊடக பிரிவின் மாநில தலைவர் லட்சுமி காந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராணி வெங்கடேசன், டேனியல் ராஜ் , சுடலையாண்டி, அமைப்புசாரா மாநில தலைவர் மகேஸ்வரன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்கள், மண்டல தலைவர்கள் ,வார்டு தலைவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட கலந்து கொள்கின்றார்கள். மேலும் இதில், தேசிய தொண்டர்கள் அனைவரும் பெரும் அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.