• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காவேரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

  • Share on

தூத்துக்குடியில் காவேரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை  பிங்க் அக்டோபர் என அழைக்கப்படும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் மருத்துவத்துறையினரால் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி பொதுமக்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிங்க் அக்டோபர் மாத விழிப்புணர்வு பேரணி, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் இருந்து புறப்பட்டு வஉசி கல்லூரி வளாகம் வழியாக மீண்டும் டிவிடி சிக்னல் வந்தடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். காவேரி மருத்துவமனை மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேட்டர் டாக்டர் லட்சுமணன் மற்றும் காவேரி மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் இந்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பேரணியில் ஏபிசி மகளிர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் பங்கேற்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் செய்தியாளர் வீட்டில் நவராத்திரி கொலு - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

எட்டயபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா : அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

  • Share on