தமிழக முழுவதும் நவராத்திரி விழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
குருவாயூர் கிருஷ்ணன், அஷ்டலட்சுமி வகையான பொம்மைகள், சிவன் பொம்மைகள், வளைகாப்பு பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் பொம்மைகள், சரவண பொம்மை, சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், கைலாய பர்வதம் செட், போன்ற பொம்மைகள் வைத்து கொலு அலங்கரிக்கப்படுகின்றன. மக்கள் எல்லா வளமும் பெருக செய்து, மக்கள் எந்த நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும் எனவும் பிராத்தனை செய்கின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சண்முகசுந்தரம், ரேகா தம்பதியினர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலுவை நவராத்திரி சரஸ்வதி பூஜையன்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பார்வையிட்டு வாழ்த்தினார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் பேபிஏஞ்சலின், சண்முகபுரம் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூரியகாந்த், கார்த்திகேயன், அல்பட் ஆகியோர் உடனிருந்தனர்.