• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு!

  • Share on

தூத்துக்குடி அருகே வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியவரை புதுக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை போடம்மாள் புரத்தைச் சேர்ந்த இசக்கி முத்து மனைவி பால சுந்தரி ( 60 ). பக்கத்து வீட்டில் குடியிருக்கும் காந்திமதி ( 50 ) யுடன்,  நேற்று முன்தினம் மாலை கூட்டாம்புளியில் இருந்து குலையன்கரிசல் செல்லும் சாலையில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தனர்.  அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் பாலசுந்தரையின் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து போலீஸில் பாலசுந்தரி புகார் கொடுத்தார். இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி வரை இரு விரைவு ரயில்கள் நீட்டிக்க வேண்டும் - மாவட்ட பயணியர் நலச்சங்கம் கோரிக்கை!

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழா - அமைச்சர் கீதாஜீவன் சாமி தரிசனம்

  • Share on