வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளை முன்னிட்டு கயத்தாறில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தோட்டிலோவன்பட்டி விளக்கு சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது விருதுநகர் மாவட்ட விடுதலை களத்தின் மாவட்டச் செயலர் அருண்குமார், ராஜ கம்பளத்தார் காப்பு பேரவை தலைவர் குட்டி உள்ளிட்ட 15 பேர் இருசக்கர வாகனத்தில் கட்டபொம்மன் நினைவிடத்திற்கு செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நான்கு சக்கர வாகனத்தில் செல்ல ஏற்பாடு செய்தனர். இருப்பினும் அவர்கள் தங்களது வாகனத்தை வைத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.