• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே எதிரே எதிரே சென்ற பைக்குகள் மோதி வடமாநில இளைஞர் ஒருவர் பலி!

  • Share on

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே எதிரெதிரே சென்ற இரண்டு இருசக்கர  வாகனங்கள் மோதிய விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் பலியானார்.

கூட்டாம்புளியை சேர்ந்தவர் பொன்சீலன் ( 44 ) அவரது மனைவி ஜெயகீதா ( 39 ) மகன் ஷெல்டர் ( 7 ). இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு சாயர்புரம் செல்ல தேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த நித்திஷ்  ( 22 ) மற்றொரு இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார்.  இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் நித்திஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த பொன்சிலன், ஜெயகீதா, ஷெல்டன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் விழா - 15 பேர் மீது வழக்குப்பதிவு

  • Share on