• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

  • Share on

தசரா திருவிழாவை முன்னிட்டு அக்.24 மற்றும் 25ம் தேதிகளில் குலசேகர பட்டினம் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு வருகிற 24ம் தேதி மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-ன் படி குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்படி தினங்களில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

இராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை!

தூத்துக்குடி அருகே எதிரே எதிரே சென்ற பைக்குகள் மோதி வடமாநில இளைஞர் ஒருவர் பலி!

  • Share on