• vilasalnews@gmail.com

இராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெம்பூர் காலனியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற இராணுவ வீரர் கொலையுண்டுள்ளார்.

இது சம்மந்தமாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கொலை வழக்கு சம்மந்தமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் ஆப் குழுக்கள், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழக்கின் புலன் விசாரணையை பாதிக்கின்ற வகையில் சட்டத்தை மீறி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  எச்சரித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது - ரூ.90,000 மதிப்புள்ள வாகனம் மீட்பு

தூத்துக்குடியில் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

  • Share on