• vilasalnews@gmail.com

திமுக பொறியாளர் அணி சார்பில் பேச்சுப் போட்டி - அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

  • Share on

குறுக்குச்சாலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பு அணிகளின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் இன்று 16ம் தேதி திங்கள் கிழமை காலை குறுக்குச் சாலையில் உள்ள கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் வைத்து பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு மாபெரும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ. டி. ஐ. மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்பக் கல்விக்கு தோள்கொடுத்த கலைஞர், தொழில் துறையை உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன் மிக்கக் கல்வியும், தெற்குச் சூரியன், கலைஞரும் தமிழும் ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்கள் போட்டியில் கலந்து கொண்டவர்கள் பேசினர். 

இந்த நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அவைத் தலைவர் செல்வராஜ், இலக்கிய அணி மாநகர அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞரணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் மதியழகன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மீணவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளார் வழக்கறிஞர் பாலகுருசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், மாநில பேச்சாளர் சரத் பாலா, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் வர்ஷிணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பிரவீன் டிடிசிஆர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்பி கோகுல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

சதுரகிரி மலை ஏறிய தூத்துக்குடி பக்தர் உயிரிழப்பு!

லியோ குறித்து ஒரே வரியில் நச்சுனு சொல்லி அடித்த ரஜினி

  • Share on