• vilasalnews@gmail.com

சதுரகிரி மலை ஏறிய தூத்துக்குடி பக்தர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 42 ). சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வந்தார்.

நேற்று காலை நண்பர் நாகராஜன் என்பவருடன் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய சதுரகிரி வந்துள்ளார். மதியம் இரட்டை மகாலிங்கம் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  மேலும் இச்சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

திருச்செந்தூரில் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு

திமுக பொறியாளர் அணி சார்பில் பேச்சுப் போட்டி - அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

  • Share on