• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு

  • Share on

திருச்செந்தூரில் பெண்ணிடம்  9 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள தலைவன் கோட்டையைச் சேர்ந்தவர் ராமஜெயம் மனைவி வேல்துரைச்சி (60). இவர் குடும்பத்துடன்  திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு நடந்து செல்லும் வழியில் மர்ம நபர்,  வேல்துரைச்சி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துச் சென்றுவிட்டாராம். 

இதுகுறித்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

பாளையங்கோட்டை சிறையில் 9 ஆயுள் கைதிகள் விடுதலை : தமிழ்நாடு அரசு உத்தரவு

சதுரகிரி மலை ஏறிய தூத்துக்குடி பக்தர் உயிரிழப்பு!

  • Share on