தசரா பண்டிகை முன்னிட்டு நாளை முதல் திருச்செந்தூர் குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் நடைபெற உள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 15ஆம் தேதி ( நாளை ) முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்வலுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.