• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் இருளில் மூழ்கிய எட்டயபுரம் சாலை - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!

  • Share on

கோவில்பட்டியில் எட்டயபுரம் இருவழிச் சாலையில் உள்ள மின்விளக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எரியவில்லை.

இந்த சாலை மார்க்கமாக விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமநாதபுரம் செல்லும் பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வீதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயம் நீடிக்கிறது. எனவே, இந்த சாலையில் மின்விளக்குகளை எரிய விடுவதற்கு நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

ஓட்டப்பிடாரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தசரா பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

  • Share on