• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே மழை நீர் வடிகாலில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

  • Share on

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு ராஜிவ் நகரில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

முள்ளக்காடு  அருகே உள்ள ராஜீவ் நகர் 7வது தெருவில் புதிதாக போடப்பட்ட மழைநீர் வடிகாலில்  மூடி போடப்படாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் அந்த வடிகாலில் சினை பசுமாடு ஒன்று நேற்று அதிகாலையில் விழுந்து கிடப்பதாக தெர்மல் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு சுடலைமுத்து,சுதன், மைக்கில் அந்தோணி, சின்னத்தம்பி, அசோக் வேலாயுதம், சதீஷ்குமார் ஆகியோர் உடனடியாக தீயணைப்பு வாகனத்துடன் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

  • Share on

குலசேகரப்பட்டினம் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்

திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

  • Share on