• vilasalnews@gmail.com

குலசேகரப்பட்டினம் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்

  • Share on

குலசேகரப்பட்டினம் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை வந்தார். புரட்டாசி மாத  கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வழிபட்ட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பின்னர் விநாயகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அமைச்சர்  பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  • Share on

நாசரேத்தில் தலைமை ஆசிரியர் தாக்கியதில் பிளஸ் 1 மாணவர் காயம்!

தூத்துக்குடி அருகே மழை நீர் வடிகாலில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

  • Share on