நாசரேத்தில் தலைமை ஆசிரியர் தாக்கியதில் பிளஸ் 1 மாணவர் காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாசரேத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் பேண்டை முழங்களுக்கு மேல் வரையிலும் மடித்து வைத்து வந்ததாக கூறப்படுகிறது அந்த மாணவரை பார்த்த தலைமை ஆசிரியர் கண்டித்தார் அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் மாணவரை பிறம்பால் தக்கதாக கூறப்படுகிறது.
இதனையாடுத்து காயம் அடைந்த மாணவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.