• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சிவசூரியன் ( வயது 38 ) இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று வேலை முடித்து மதியம் ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தெய்வசெயல்புரம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

 இதனால் அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இருந்தார். இது குறித்து புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு 16ஆம் தேதி அதிமுகவினர் அஞ்சலி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

நாசரேத்தில் தலைமை ஆசிரியர் தாக்கியதில் பிளஸ் 1 மாணவர் காயம்!

  • Share on