வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு 16ஆம் தேதி அதிமுகவினர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலாக எதிர்த்தவரும், வீரமும் வேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன் 224 வது நினைவு தினம் வருகிற 16-ஆம் தேதி திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அன்றைய தினம் காலை 10 மணியளவில் அதிமுக சார்பில் கடம்பூர் ராஜூ, கே.டி ராஜேந்திர பாலாஜி, சி.த.செல்ல பாண்டியன், சின்னதுரை மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் இந்நாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி துணை நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.