தூத்துக்குடியில் 3 மழைநீர் வாறுகால்களை உடனடியாக தூர்வார வலியுறுத்தி அமமுக கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கடலுக்கு செல்கின்ற 3 வாறுகால்களை போர்கால அடிப்படையில் தூர்வார வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் இரா.ஹென்றி தாமஸ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வின் போது, மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் சண்முககுமாரி, மகளிர் அணி மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அந்தோணி கிரேஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான எட்வின் பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.