• vilasalnews@gmail.com

பிஸ்கட் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து!

  • Share on

ஆழ்வார்திருநகரி அருகே பிஸ்கட் லோடு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் முனியசங்கர் (வயது 33). இவர் நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் கன்டெய்னர் லாரிடிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கங்கைகொண்டான் சிப்காட்டில் இருந்து கன்டெய்னர் லாரியில் பிஸ்கட் லோடு ஏற்றிக் கொண்டு, சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நள்ளிரவில் ஆழ்வார்திருநகரி தெப்பக்குளம் அருகில் கன்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்த அவர், நேற்று காலை 8 மணி அளவில் மீண்டும் லாரியை எடுத்துக்கொண்டு சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆழ்வார்திருநகரி அருகே செம்பூர் வளைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தரிசாக கிடந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் முனியசங்கர் காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, காயமடைந்த முனியசங்கரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரத்தில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரியை மீட்கும் பணியும் நடந்தது.

  • Share on

தூத்துக்குடியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்கள் உங்கள் பைக்கில் இனியும் இருந்ததுனா... அவ்வளவு தான்!

திருமணம் செய்து கொள்வதாக மதபோதகர் ரூ. 5 லட்சம் மோசடி : ஆசிரியை புகார்!

  • Share on